விநாயகா மிஷன் பல்கலை ஹெல்த் சயின்ஸ் டீனுக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலை ஹெல்த் சயின்ஸ் டீனுக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலை ஹெல்த் சயின்ஸ் டீனுக்கு விருது
ADDED : ஜூன் 05, 2024 06:06 AM
புதுச்சேரி: விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு விருது வழங்கப்பட்டது.
ஆரோபிந்தோ அறக்கட்டளையின் தொடக்கமான தி ப்ராகிரஸ் குளோபல் விருதுகள், கல்வி துறையில் சிறந்த தனித்துவமான பங்களிப்பாற்றி வரும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை அடையாளப்படுத்தி ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது.
இந்த ஆண்டிற்காக விருது வழங்கும் விழா சிங்கப்பூர் மேலாண்மை பல்கலையில் நடந்தது.
விழாவில், விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் டீன் செந்தில்குமார், சிறப்புரையாற்றினார். மேலும் சர்வதேச கருத்தரங்கில் சுகாதார துறை சார்ந்த ஆய்வு கட்டுரை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து உயர்கல்வி நிறுவனம் மூலம் சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றும் அவருக்கு 'சமூகம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பணியாற்றுபவர்' என்ற விருது வழங்கி கவுரவித்தனர்.
விருதினை மலேசியா மணிப்பால் குளோபல் பல்கலை பேராசிரியர் ஹபிபுல்லாகான், தி ப்ராகிரளஸ் குளோபலின் நிர்வாக இயக்குனர் கோஷ் மற்றும் மெகா போர்ட் பிரைவேட் லிட்., நிறுவனத்தின் இயக்குனர் டாம் ஸ்மஹேன் ஆகியோர் வழங்கினர்.
விழாவில், பல்வேறு கல்வியாளர்கள், கல்வி நிறுவன வல்லுநர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விருது பெற்றமைக்காக துறையின் டீனுக்கு பல்கலை் வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா மற்றும் துறை பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.