சைபர் குற்ற தடுப்பு குறும்படத்துக்கு பரிசு
சைபர் குற்ற தடுப்பு குறும்படத்துக்கு பரிசு
சைபர் குற்ற தடுப்பு குறும்படத்துக்கு பரிசு
ADDED : ஜூன் 12, 2024 12:50 AM
சென்னை:சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு குறும்பட போட்டியில் பங்கேற்க, பொதுமக்களுக்கு, தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விபரம் தெரியாமல் பொதுமக்கள் பணத்தை இழந்து தவிப்பதும் தொடர்கிறது. அவற்றை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதனிடையே, சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்கவும், அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக காவல் துறை முயற்சி மேற்கொண்டுஉள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குறும்படம் எடுத்தால், பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, காவல்துறை சைபர் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் தங்கள் படைப்பாற்றல், புதுமை, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த, காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு குறும்பட போட்டி நடத்தப்படுகிறது. இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, 'கூகுள் பார்ம்' வாயிலாக, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
பங்கேற்பவர்கள் தங்களின் குறும்படங்களை, கூரியர் மோசடி, வர்த்தகம் - முதலீட்டு மோசடி, மின்கட்டண மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி ஆகிய கருப்பொருளில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறும்படங்களை கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்து, அதற்கான லிங்க்கை, வரும் 27ம் தேதிக்குள் கூகுள் பார்மில் பகிர வேண்டும்.
இதில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 30,000; இண்டாம் பரிசு 20,000; மூன்றாம் பரிசு 15,000 ரூபாய் வழங்கப்படும். வெற்றியாளர்கள், ஜூலை 5ல் அறிவிக்கப்படுவர். போட்டி பற்றிய தகவலுக்கு சமூக ஊடகங்களில், @tncybercrimeoff ஆகியவற்றை பின்தொடரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.