/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ லோக் அதாலத்தில்694 வழக்குகளுக்கு தீர்வு லோக் அதாலத்தில்694 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத்தில்694 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத்தில்694 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத்தில்694 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 12, 2024 12:50 AM
ஊட்டி;நீலகிரியில் நடந்த லோக் அதாலத்தில், 694 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.
ஊட்டி காக்கா தோப்பு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்டம் நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைத்தார்.
அதில், 'காசோலை, சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கி வழக்குகள், குடும்ப பிரச்னை சம்பந்தமான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாரா கடன் தொடர்பான வழக்குகள்,' என, 1,200க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான, 694 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
மகளிர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, நீலகிரி மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான செந்தில்குமார், குடும்ப நல நீதிபதி லிங்கம், தொழிலாளர் சட்ட நீதிபதி சந்திரசேகர், உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாரதி பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.