/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
ADDED : ஜூன் 12, 2024 12:51 AM
ஊட்டி;ஊட்டி கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட, உல்லாடா கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
கால்நடைகளுக்கு ஏற்படும் வியாதிகளில், கோமாரி நோய் தாக்குவது மிகவும் ஆபத்தானது. இந்த நோயில் இருந்து மாவட்டத்தில் உள்ள, 28 ஆயிரத்து 200 பசு மற்றும் எருமை இனங்களை காக்கும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கி நடத்தி வருகிறது.
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம், ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு, 29 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்த நாளில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விபரத்தினை, முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால், அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட, உல்லாடா கிராமத்தில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடந்தது. மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து, பணியை ஆய்வு செய்தார். அதில், கால்நடை மருத்துவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலர் பங்கேற்றனர்.