எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது
எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது
எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது
ADDED : ஜூன் 12, 2024 01:00 AM

சென்னை:இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு, 2024ம் ஆண்டுக்கான, 'அவ்வையார் விருது' நேற்று வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் முன் மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று, சமூக நலத்துறை சார்பில், 'அவ்வையார் விருது' வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுபவருக்கு, 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு, இலக்கியம் வழியே, சமூக தொண்டாற்றி வரும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜாதி மற்றும் பாலினம் சார்ந்து, சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும், அநீதிகளையும் எடுத்துக்காட்டும் பல்வேறு நுால்களை, பாமா எழுதி உள்ளார். இவற்றில், 'கருக்கு, சங்கதி, வன்மம், மனுஷி' போன்ற நாவல்களும், 'குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும்' போன்ற சிறுகதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
இவர் எழுதிய, 'கருக்கு' என்ற புதினம், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதை பெற்றுள்ளது. இவர் எழுதிய நுால்கள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பாமாவின் இலக்கிய பணியை பாராட்டி, அவருக்கு 2024ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.