ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்
ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்
ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்
ADDED : ஜூன் 05, 2024 02:18 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், பகுஜன்திராவிட கட்சி சார்பில் போட்டியிட்டவர் ராஜன் சிங். திருநெல்வேலியில் வசிக்கும் இவர், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.
கோணம் பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த இவர், இடுப்பில், உறையில் கத்தி வைத்திருந்தார். போலீசார் இந்த கத்தியை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
ஆனால், தான் சீக்கிய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும், அதனால் கத்தி வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
அவரிடம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லாததால், போலீசார் ஏற்க மறுத்தனர். நீண்ட நேரம் அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எனினும் போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர்.