கள்ளச்சாராய வியாபாரிகள் 5 பேர் குண்டாசில் கைது
கள்ளச்சாராய வியாபாரிகள் 5 பேர் குண்டாசில் கைது
கள்ளச்சாராய வியாபாரிகள் 5 பேர் குண்டாசில் கைது
ADDED : ஜூலை 21, 2024 05:27 AM
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனிராஜ்,38; செல்லுார் பதினெட்டாம்படியான்,44; ஜெல்சன்,22; கீழ்வேளூர் சபரிநாதன்,34; வெளிப்பாளையம் கமல்,24; சாராய வியாபாரிகளான இவர்கள் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் தொடர்ந்து காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து தமிழக பகுதியில் விற்பனை செய்தனர்.
இவர்களது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஹர்ஷ் சிங் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.