தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் 43 பேருக்கு வாந்தி, பேதி
தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் 43 பேருக்கு வாந்தி, பேதி
தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் 43 பேருக்கு வாந்தி, பேதி
ADDED : ஜூலை 03, 2024 01:56 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது.
இங்குள்ள விடுதிகளில், தமிழகம் மட்டு மின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, விடுதி உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிஉள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் உணவு சாப்பிட்டு வகுப்பறைக்கு வந்த, 43க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவர்கள், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது.
'தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில், மூன்று அடுக்குமாடி விடுதிகளிலும் தங்கியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஒரே உணவுதான் வழங்கப்படுகிறது.
இருப்பினும், ஒரு அடுக்குமாடியில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீரில் தொற்று ஏற்பட்டுள்ளதா என, தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என, போலீசார் தெரிவித்தனர்.