/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மவுனம் காப்பது மரபல்லவே'நுகர்வோர் அமைப்பு 'காட்டம்' 'மவுனம் காப்பது மரபல்லவே'நுகர்வோர் அமைப்பு 'காட்டம்'
'மவுனம் காப்பது மரபல்லவே'நுகர்வோர் அமைப்பு 'காட்டம்'
'மவுனம் காப்பது மரபல்லவே'நுகர்வோர் அமைப்பு 'காட்டம்'
'மவுனம் காப்பது மரபல்லவே'நுகர்வோர் அமைப்பு 'காட்டம்'
ADDED : ஜூலை 03, 2024 01:56 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் காதர் பாஷா மனு வழங்கி, கூறியதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தினசரி மார்க்கெட், சிலாட்டர் ஹவுஸ், இறைச்சி மீன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், மரம் வளர்ப்பு, பசுமைக்குடில் பூங்கா போன்றவை அமைத்து, பராமரிக்க வேண்டும் என, திருப்பூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.
எவ்வித பதிலும் கிடைக்காததால், மேல் முறையீடாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர், சென்னை நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அவர்களும் எவ்வித பதிலும் தராமல் மவுனம் காப்பது, ஏற்புடையதாக இல்லை; இது, மாண்பும் இல்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.