திருவண்ணாமலையில் நள்ளிரவில் இடி தாக்கி தீப்பிடித்த 4 கடைகள்
திருவண்ணாமலையில் நள்ளிரவில் இடி தாக்கி தீப்பிடித்த 4 கடைகள்
திருவண்ணாமலையில் நள்ளிரவில் இடி தாக்கி தீப்பிடித்த 4 கடைகள்
ADDED : ஜூன் 04, 2024 01:42 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பலத்த இடியுடன் கன மழை பெய்தது. இதில், திருவண்ணாமலை நகரின் மையத்தில், காந்தி சிலை அருகே மின் மோட்டார் விற்பனை நிலையம், சைக்கிள் கடை, பிளாஸ்டிக், பேன்சி பொருட்கள் கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என, நான்கு கடைகள் இருந்தன. அந்த கடைகள் மீது இடி விழுந்ததில், தீப்பிடித்து, கொழுந்து விட்டு எரிந்தன.
இதனால், அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள், இரு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை, 4:30 மணி வரை தொடர்ந்து, 6 மணி நேரம், தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், நகரின் மையப்பகுதியில் பெரிய அளவிலான தீ விபத்து பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின என கூறப்படுகிறது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.