6 மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 06:32 AM

சென்னை: தமிழகத்தில், ஆறு மாவட்டங்களில், 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில், இடி, மின்னல் காற்றுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கம் மற்றும் ஏற்காட்டில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில், 3 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை, ஈரோடு, கரூர் பரமத்தி, கடலுார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.