நீர் மின் நிலையங்களில் 1,000 மெகா வாட் உற்பத்தி
நீர் மின் நிலையங்களில் 1,000 மெகா வாட் உற்பத்தி
நீர் மின் நிலையங்களில் 1,000 மெகா வாட் உற்பத்தி
ADDED : ஜூலை 21, 2024 12:14 AM

சென்னை : நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் நீர் மின் உற்பத்தி, 1,000 மெகா வாட் தாண்டியுள்ளது.
நீலகிரியில் குந்தா, கோவையில் காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன.
அவை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. தெற்கு மேற்கு பருவ மழையின்போது, அணைகளில் தண்ணீர் தேக்கி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சீசனில் போதிய மழை பெய்யாததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், கடந்த மாதம் வரை தினமும் சராசரியாக, 200 - 250 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
அதுவும், காலை, மாலை உச்ச நேர தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டது.
தற்போது, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்கிறது. எனவே, பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் இருந்து நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதை பயன்படுத்தி, தினமும், 250 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள, 36 அணைகளிலும், 50 சதவீதம் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்தி, தினமும், 1,000 மெகா வாட் மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.