/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு
ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு
ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு
ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு
ADDED : ஜூலை 21, 2024 12:14 AM
பாலக்காடு;பாலக்காடு, சித்தூர் ஆற்றில், வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த இரு சிறுவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டித்தாவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபினவ் கிருஷ்ணா, 13, அஜி, 15. நண்பர்களான இவர்கள் கால்பந்து விளையாடிய பின், நேற்று மதியம், 2:15 மணிக்கு, சித்தூர் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, இவர்கள் கையில் இருந்த பந்து திடீரென தண்ணீரில் விழுந்தது. பந்தை எடுக்க முயன்ற இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும், ஆற்றின் நடுவில் உள்ள பாறை மீது ஏறி நின்று கொண்டனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர், நீண்ட நேர முயற்சிக்குப் பின், கயிறு மற்றும் ஏணியை பயன்படுத்தி சிறுவர் இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர்.
கடந்த, 16ம் தேதி மீன் பிடித்த மைசூரை சேர்ந்த 4 பேரை, இதே பகுதியில் தீயணைப்பு படையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள, ஆழியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், மூலத்தறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மூலத்தறை அணை மதகுகள் படிப்படியாக திறக்க வேண்டிய சூழ்நிலையில், சித்தூர் ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என, பாலக்காடு மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.