Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தாம்பரம் - மங்களூரு 'ஏசி' ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - மங்களூரு 'ஏசி' ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - மங்களூரு 'ஏசி' ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - மங்களூரு 'ஏசி' ரயில்கள் அறிவிப்பு

ADDED : ஜூன் 05, 2024 01:36 AM


Google News
சென்னை:கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம் - மங்களூரு இடையே, 'ஏசி' சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தாம்பரத்தில் இருந்து, வரும் 7, 9, 14, 16, 21, 23, 28, 30ம் தேதிகளில், மதியம் 1:55 மணிக்கு புறப்படும், 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:55க்கு மங்களூரு செல்லும்

 மங்களூரில் இருந்து, 8, 10, 15, 17, 22, 24, 29, ஜூலை 1ம் தேதிகளில் பகல் 12:00க்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us