தனித்து நின்றாலும் தமிழகத்தில் காங்., ஜெயிக்கும்: செல்வப்பெருந்தகை
தனித்து நின்றாலும் தமிழகத்தில் காங்., ஜெயிக்கும்: செல்வப்பெருந்தகை
தனித்து நின்றாலும் தமிழகத்தில் காங்., ஜெயிக்கும்: செல்வப்பெருந்தகை
ADDED : ஜூலை 18, 2024 08:18 PM
''தனித்து நின்றாலும், வெற்றி பெறும் வலிமையுடன் உள்ளோம்,'' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திருவள்ளூர் நகர காங்., செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், செல்வப்பெருந்தகை பேசியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் இருந்த நிலை, இப்போது முழுமையாக மாறி இருக்கிறது. எல்லா இடங்களிலும் கட்சி வலிமையாக உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் அளவுக்கான சூழல் உள்ளது. இருந்தபோதும் கட்சி கட்டமைப்பை இன்னும் கூடுதலாக வலுவாக்க வேண்டும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் நேரத்தில், எங்களுக்கு உரிய மரியாதையும்; அங்கீகாரமும் அளிக்கவில்லை என, கட்சியினர் மத்தியில் பெரிய மனக்குறை உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனப்படுத்துவது போலத்தான் நடந்து கொள்கின்றனர். நாம் நம்மை முழுமையாக வலுப்படுத்திக் கொள்ளும்போது, இதெல்லாம் தானாகவே மறைந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கட்சி வளர்ச்சிக்கு என்ன தேவையோ, அது குறித்துப் பேசினேன். என்னதான் கூட்டணி என்றாலும், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் என்றால், எங்களுக்கு 9 தொகுதிகள்தான் கொடுக்கின்றனர். 'ஓட்டு வங்கி அதிகரிகரிக்கட்டும்; அப்போது, 20 தொகுதிகள் கேட்டாலும் கொடுக்கிறோம்' என்கிறார்கள். அதற்கேற்ப கட்டமைப்பை கட்சியினர் உருவாக்க வேண்டும். இதைத்தான் கூட்டத்தில் பேசினேன். யாரையும் யாரும் விமர்சிக்கவும் இல்லை; யாருக்கும் நெருக்கடி கொடுக்கவும் இல்லை.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
வாய்ஸ் பபுள்:
பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் என்றால், சொந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்த இப்படி பேசுவது சகஜம் தான்.
- நமது நிருபர் -