Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கல்வெட்டு பயிலரங்கம் தொல்லியல் கண்காட்சி

கல்வெட்டு பயிலரங்கம் தொல்லியல் கண்காட்சி

கல்வெட்டு பயிலரங்கம் தொல்லியல் கண்காட்சி

கல்வெட்டு பயிலரங்கம் தொல்லியல் கண்காட்சி

ADDED : ஜூலை 18, 2024 08:16 PM


Google News
காஞ்சிபுரம்:தொல்லியல் கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் துறை மற்றும் விழுப்புரம் உமா அறக்கட்டளையுடன் இணைந்து காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி நடந்து வருகிறது.

நான்காம் நாளான நேற்று, சோழர் கால சமுதாயமும் கல்வெட்டுகளும் என்ற தலைப்பில், முனைவர் சுப்புராயலு, நாணயங்களின் பல்வேறு சிறப்பு குறித்து அளக்குடி ஆறுமுக சீதாராமன், பாண்டியர் கால கல்வெட்டுகள், கலைகள் என்ற தலைப்பில் முனைவர் வேதாசலம் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்.

தமிழக கோவில்களில் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் ராசவேலு பயிலரங்கை நடத்தினார்.

கல்வெட்டு பயிலரங்கத்தின் மூன்றாம் நாளில், மாணவர்களுக்கு கல்வெட்டுகளை டிஜிட்டல் படுத்தும் முறை குறித்து தொல்லியல் அறிஞர்கள் பயிற்சியளித்தனர்.

தொல்லியல் கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டு இருந்த தொல்லியல் மற்றும் புகைப்படம் ஓவியம் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை பல்வேறு கல்லுாரிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்.

பயிலரங்கிற்கான ஏற்பாட்டை கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us