சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 07:40 PM

சென்னை: சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக மத்திய அரசு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் கூறியது, இந்தியாவில் பின் தங்கிய சமூகத்தினரின் விகிதாசாரத்தை தெரிந்து கொள்ளவும், நாட்டின் சமூக நீதியை நிலைநாட்டிட, நமது உரிமைகளை பெறவும் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி.தி.மு.க.,வின் சட்டப் போராட்டங்களால் 3 ஆண்டுகளில் 15,066 ஓ.பி.சி., மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது பெருமை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.