/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்ப்பு காரியாபட்டியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 11, 2025 11:28 PM
காரியாபட்டி; காரியாபட்டியில் வசிக்கும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி பழக்கம், போலீஸ் தேர்வுகளுக்கு தயாராக ஏற்ற விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் படித்த இளைஞர்கள், உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியாமல் போவதற்கு விளையாட்டு மைதானம் எதுவும் இல்லாததுதான். போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதற்கு திறமை இருந்தும் உடற்பயிற்சி செய்யாததால் பெரும்பாலான இளைஞர்கள் கோட்டை விடுகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் சட்டசபையில் பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் திருச்சுழி தொகுதியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
அதனை காரியாபட்டியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை எழுந்துள்ளது. போக்குவரத்திற்கு எளிதாக உள்ள இப்பகுதியில் மைதானம் அமையும் பட்சத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏதுவாக இருக்கும். இளைஞர்களின் ஆரோக்கியம், சுறுசுறுப்பு உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க உடற்பயிற்சி பழக்கத்தை வளர்க்க காரியாபட்டியில் சிறு விளையாட்டு மைதானம் ஏற்படுத்த இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.