/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போது விருதுகளை பெறலாம் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் பேட்டி செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போது விருதுகளை பெறலாம் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் பேட்டி
செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போது விருதுகளை பெறலாம் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் பேட்டி
செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போது விருதுகளை பெறலாம் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் பேட்டி
செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போது விருதுகளை பெறலாம் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர் பேட்டி
ADDED : ஜூன் 01, 2025 01:02 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:''செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போதும், ஒவ்வொருவரும் இதுபோன்ற விருதுகளை பெற முடியும்,'' என, ஜனாதிபதி முர்முவிடம் இருந்து சிறந்த சேவைக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை செவிலியர் அலமேலு மங்கை தெரிவித்தார்.
சேத்துார் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த கருப்பையா, பிலோமினா தம்பதி மகள் அலமேலு மங்கை 40. இவரது கணவர் சடையாண்டி மின் வாரிய உதவி பொறியாளர். மகள்கள் பத்மஜா 15, மகா ஸ்ரீனிகா 12. 2008ல் திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின் விருதுநகர் மாவட்டம் குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணிபுரிந்தார். 2013 முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் மருத்துவ உதவி தேவை உள்ள அனைத்து மக்களுக்கும் நேரம் காலம் பார்க்காமல் மருத்துவ சேவை செய்ததற்காக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதிற்கு தேர்வு பெற்றுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து தேர்வாகி நேற்று முன் தினம் டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் விருதினை பெற்றார்.
அலமேலு மங்கை கூறியதாவது: இந்த விருது பெற்றது மகிழ்ச்சி தருகிறது. முன்னை விட மேலும் சிறப்பாக பணியாற்றும் எண்ணத்தை அதிகரிக்க செய்கிறது.
மருத்துவ சேவை தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து பணிபுரியும் நம்பிக்கையையும் தருகிறது. தாயுள்ளத்துடன் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்.ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பணியை நிறைவான மனதுடன் செய்யும் போதும், ஒவ்வொருவரும் இது போன்ற விருதுகளை பெற முடியும். என் வெற்றிக்கு உறுதுணையான சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள், குடும்பத்தினர், பெற்றோருக்கு நன்றி என்றார்.