ADDED : ஜூன் 11, 2025 07:09 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையில் 47 விடுதிகள் செயல்படுகிறது. இதில் பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கும், 18 மாணவிகளுக்கும், கல்லுாரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கும், 2 மாணவிகளுக்கும் உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18க்குள்ளும், கல்லுாரி விடுதிகளுக்கு ஜூன் 15க்குள்ளும் சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.