/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துாரில் இடித்த கட்டடம் மீண்டும் வருமா சாத்துாரில் இடித்த கட்டடம் மீண்டும் வருமா
சாத்துாரில் இடித்த கட்டடம் மீண்டும் வருமா
சாத்துாரில் இடித்த கட்டடம் மீண்டும் வருமா
சாத்துாரில் இடித்த கட்டடம் மீண்டும் வருமா
ADDED : மார் 16, 2025 06:54 AM
சாத்துார்; சாத்துாரில் அரசு மாணவர் விடுதி இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துாரில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
சாத்துாரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் சாத்துாரில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்று வரும் நிலையில் அவர்கள் தினந்தோறும் சைக்கிள், பஸ், ஆட்டோக்களில் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
வெகு தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் எளிதில் பள்ளிக்குச் சென்று வருவதற்காக கடந்த காலங்களில் மாணவர்களுக்காக அரசு மாணவர் விடுதி சாத்துாரில் செயல்பட்டு வந்தது.
இதனால் கிராமப்புற மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று கல்வி கற்க வசதியாக இருந்தது.
ஆண்டாள்புரத்தில் செயல்பட்டு வந்த அரசு மாணவர் விடுதி கட்டடம் பழுதான நிலையில் அந்தக் கட்டடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
அங்கு தற்போது வரை புதிய கட்டடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் நகரில் தங்கி இருந்து கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்து வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் காலையில் பஸ்சில் வந்து தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.
சாத்துாரில் அரசு மாணவர் விடுதி இருந்தால் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கிராமப்புற மாணவர்கள் கருதுகின்றனர்.
எனவே ஏற்கனவே மாணவர் விடுதி செயல்பட்டு வந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டி மாணவர் விடுதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.