ADDED : மார் 16, 2025 06:54 AM
விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்டு வடம் காயமடைந்தோருக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
தண்டுவடம் காயமடைந்து கை, கால்கள் செயலிழந்தோருக்கான சிறப்பு சிகிச்சை முகாம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நடந்தது. இந்த முகாமை டீன் ஜெயசிங் துவக்கி வைத்தார். இதில் இ.சி.ஜி., ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் பொது, அறுவை சிகிச்சை, எலும்புமுறிவு, சிறுநீரகம், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பயனாளிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முகாமிற்கு அழைத்துவரபட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் பாபுஜி செய்தார்.