/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ-- மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--
ADDED : செப் 16, 2025 03:53 AM

சேத்துார்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியின் வனத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் ராஜபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர், தென்காசி மாவட்ட எல்லையான சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. இரு மாவட்ட வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தற்போது காட்டுத்தீ ராஜபாளையம் எல்லையான தேவதானம் வனப்பகுதியிலும் பரவி உள்ளது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.