ADDED : செப் 16, 2025 03:53 AM
நரிக்குடி: திருச்சி பாரதிதாசன் பல்கலையில் மாநில என்.எஸ்.எஸ்., சார்பில் நடத்திய 3 நாள் பயிலரங்கில் திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் இருந்து வேதியல் துறை மாணவி காவியா கயிறு இழுத்தல் போட்டியில் முதல் பரிசும், நொண்டி ஆட்டத்தில் 2ம் பரிசு பெற்று சாதனை படைத்தார்.
அதைத்தொடர்ந்து கோவை பல்கலையில் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த யூத் பார் சோசியல் ஜஸ்டிஸ் பயிற்சி முகாமில் தமிழ் துறை மாணவி பெத்தம்மாள் பெண் சிசுக்கொலை குறித்து விழிப்புணர்வு நாடகத்திலும், மெட்ராஸ் பல்கலையிலும், யூத் அகைன்ஸ்ட் டிஜிட்டல் மீடியா அடிக்சன் பயிற்சி முகாமில் தமிழ் துறை மாணவி தென்னகத் தேவியும் சாதனை படைத்தனர். மாணவிகள், மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி, பேராசிரியர் கணேசனையும் முதல்வர் எஸ்தர் பாராட்டினர்.