/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்
காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்
காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்
காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்
ADDED : செப் 18, 2025 06:27 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டு யானை புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் பாதை கல்லாத்து காடு பகுதியில் சுரேஷ் என்பவரது தென்னந்தோப்பில் சில வாரங்களாக காட்டு யானைகள் தோப்பிற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் தோப்பில் புகுந்து 10 பெரிய தென்னை மரங்கள் உள்ளிட்ட70க்கும் அதிகமான தென்னைகளை சேதப்படுத்தின.
வனத்துறையினர் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.