/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறும் குடிநீர்:- சேதமடையும் ரோடு தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறும் குடிநீர்:- சேதமடையும் ரோடு
தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறும் குடிநீர்:- சேதமடையும் ரோடு
தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறும் குடிநீர்:- சேதமடையும் ரோடு
தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறும் குடிநீர்:- சேதமடையும் ரோடு
ADDED : செப் 18, 2025 06:28 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை நடுவே உடைப்பெடுத்துள்ள குடிநீர் குழாயால் ரோடு சேதமாவதுடன் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி சார்பில் 2018 ல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. புதிதாக 10 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமான வீடு , வணிக கட்டடங்களுக்கு சப்ளை ஆகிறது.
இந்நிலையில் அழுத்தம் காரணமாக குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாவது தொடர் கதையாகியுள்ளது.
உள்ளூர் தெருக்களில் ஏற்படும் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படும் நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் குழாயில் ஏற்படும் கசிவு இதுவரை சரி செய்யப்படாததால் குடிநீர் வீணாவதோடு ரோடு சேதம் ஆகி வருகிறது.
இதற்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் தோண்டும் பணிகளுக்கு உடனடி அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பிரச்சனை நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் தலையிட்டு வீணாகி வரும் குடிநீர் குழாய் பணிகளை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .