/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வண்டல் மண் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு எப்போது: ஆளுங்கட்சியினர் தலையீடு;அதீத ஆழத்தால் பாதிப்புவண்டல் மண் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு எப்போது: ஆளுங்கட்சியினர் தலையீடு;அதீத ஆழத்தால் பாதிப்பு
வண்டல் மண் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு எப்போது: ஆளுங்கட்சியினர் தலையீடு;அதீத ஆழத்தால் பாதிப்பு
வண்டல் மண் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு எப்போது: ஆளுங்கட்சியினர் தலையீடு;அதீத ஆழத்தால் பாதிப்பு
வண்டல் மண் எடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு எப்போது: ஆளுங்கட்சியினர் தலையீடு;அதீத ஆழத்தால் பாதிப்பு
ADDED : ஜூன் 21, 2024 03:41 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதில் ஆண்டாண்டு காலமாக ஆளுங்கட்சியினர் தலையீடு, அதீத ஆழம் தோண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. இந்தாண்டு தாசில்தார்கள் மூலம் அனுமதி அளிக்கவும், நீர்வளத்துறை மார்க்கிங் செய்த பகுதியில் அள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தாலும் அதை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய அடிக்கடி கள ஆய்வு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் நீர்வளத்துறை , ஒன்றியங்கள் கட்டுப்பாட்டிலும் கண்மாய்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலக்கெடுவில்வண்டல் மண்ணைவிவசாய பணிகள், செங்கல் சூளை பணிகளுக்கு எடுக்க அரசு அனுமதித்து வருகிறது.
இதற்கான அனுமதி முன்பு கலெக்டர் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போதுதாசில்தார்கள் வாயிலாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிகளவில் மண்ணை அகற்றினால், நீர்நிலைகளின் கரைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் நீர்வளத்துறை நிர்ணயம் செய்து மார்க்கிங் செய்து தரும் பகுதியில் மட்டுமே மண்ணை எடுப்பதற்கு அனுமதி வழங்க தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான அனுமதி வழங்கும் தேர்வுவிரைவில் மாவட்டத்திற்குவர வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ராஜபாளையம்தேவதானம் பெரியகுளம் கண்மாயில் 18 அடிக்கும், முகவூர் கண்மாயில் 12 அடிக்கும் மண் கொள்ளை நடந்தது. பொதுவாக அனுமதி தந்தாலே வெறும் 3 அடி மட்டும் தான் அரசால் வழங்கப்படும். ஆனால் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் அள்ளுகின்றனர். சில அனுமதிக்கப்படாத கண்மாய்களிலும் அதிகாரிகளின் ஆதரவோடு அள்ளுகின்றனர். இவ்வாறு அள்ளும் பலர் ஆளுங்கட்சியின்நகர, ஒன்றிய நிர்வாகிகளாக உள்ளனர். மேலும் இவ்வாறு அள்ளப்படும் வண்டல் மண் 10 சதவீதம் மட்டுமே வேளாண் பணிக்கும், மண்வளத்தை மேம்படுத்தவும் எடுத்து செல்லப்படுகிறது.
அரசியல் கட்சியினர் அள்ளும் அனைத்தும் கட்டுமான பணிகளுக்கே எடுத்து செல்லப்படுகிறது. இந்த முறை மார்க்கிங் செய்ய அறிவுறுத்தினாலும் நீர்வளத்துறை எந்த அளவில் இதை சரிவர பின்பற்றும் என்பதில் சில கேள்விகள் உள்ளன.
அள்ளுவதால் கரை, மதகு பாதிக்கப்படாமல் இருக்க கள ஆய்வு அவசியம். அதை இப்போதே துவங்கினால் தான் தீர்வு கிடைக்கும். மேலும் தாசில்தார்களை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் தனியாக குழுக்கள் அமைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது நல்ல திட்டம். விளைநிலத்தின் மண்வளம் புத்துயிர் பெறும். ஆனால் நுாறில் 99 விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில்லை. காரணம் இப்பகுதிகளில் நிலம் தரிசாக இல்லை. விளைநிலங்களில் நெல், தோப்பு விவசாயம் நடக்கிறது. விவசாயிகள் எனும் பெயரில் வேறு நபர்கள் தான் அள்ளுகின்றனர். அப்படியே மண் எடுக்க நினைத்தாலும் ஜே.சி.பி., போன்ற கனரக வாகனங்கள், ஆட்களை நிர்வகிக்க விவசாயிகளிடம் போதிய பணம்இருப்பதில்லை.விவசாயிகள் எடுத்தால் விதிப்படி 3 அடி மட்டுமே எடுப்பர். ஆனால் வேறு நபர்கள் எடுத்தால் அதிக ஆழத்தில் கொள்ளை அடிப்பர்.
இன்றைக்கும் தேவதானம் பெரியக்குளம்கண்மாய் அதீத ஆழமாக தோண்டிவிட்டதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்தாண்டில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்ததாசில்தார் அனுமதி கொடுப்பது நல்ல விஷயம் தான் என்றாலும்நீர்வளத்துறையினர் கண்காணிக்க வேண்டும். மார்க்கிங் செய்த பகுதியில் தான் அள்ளுகின்றனரா என்பதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதி ெய்ய வேண்டும், என்றார்.