/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு
நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு
நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு
நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : செப் 11, 2025 05:42 AM
நரிக்குடி : நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் ஓராண்டாக குடிநீர் பிரச்னை இருந்து வருவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தாமிரபரணி, திருப்பாச்சேத்தி குடிநீரை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி கொட்டக்காட்சியேந்தல் மக்களுக்கு குடிநீருக்காக உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டது.
நாளடைவில் சுவை மாறி குடிக்க சமைக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் திருப்பாச்சேத்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப் பட்டது.
இது போதுமானதாக இல்லை. இதையடுத்து தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரு குடிநீர் திட்டங்களால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது.
இந்நிலையில் ஓராண்டாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு சீராக வழங்கவில்லை. தாமிரபரணி குடிநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு சீரமைக்காததால், சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
திருப்பாச்சேத்தி குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
குறைந்த அளவு குடிநீர் வழங்குவதால் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
அது மட்டுமல்ல புழக்கத்திற்கான தண்ணீரும் இல்லாததால் அங்குள்ள கண்மாயில் குளிக்க, துவைக்க மற்ற பயன்பாட்டிற்கு பயன் படுத்தி வருகின்றனர்.
இதனால் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரு குடிநீர் திட்டங்கள் இருந்தும் பயனின்றி போனது.
குடிநீர் பிரச்னை இருப்பது குறித்து பலமுறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.