/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்
கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்
கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்
கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்
ADDED : செப் 11, 2025 05:42 AM
சிவகாசி : சிவகாசியில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். சிவகாசி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் வரவேற்றார்.
இதில் பூஜாரிகள் நலவாரிய பதிவு, ஓய்வூதியம் விண்ணப்பிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில், கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரிகள் இறந்த பின், அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் பெரியசாமி, காளிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.