ADDED : மே 15, 2025 12:34 AM

விருதுநகர்; விருதுநகர் பேராசிரியர் காலனி இனிமை நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல வாரங்களாகரோட்டில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. ரோடு முழுதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் அப்பகுதியினர் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
காலி மனைகளில் கழிவுநீராக தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதனால் அப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலையுள்ளது.
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னையை தவிர்க்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில் நகராட்சியினரின் அலட்சியத்தால் குடிநீர் வீணாவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.