/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ளதால் காத்திருப்பு உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ளதால் காத்திருப்பு
உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ளதால் காத்திருப்பு
உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ளதால் காத்திருப்பு
உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ளதால் காத்திருப்பு
ADDED : செப் 12, 2025 04:15 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான ரத்தம், சிறுநீர் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும் இடத்தில் ஒருவர் மட்டும் பணியில் இருப்பதால் பரிசோதனைக்கு கொடுக்கவும், முடிவுகளை வாங்கவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டுகளில் இருக்கும் உள்நோயாளி களின் ரத்தம், சிறுநீர் ஆகிய பரிசோதனைகளை செய்வதற்காக 2வது தளத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. இங்கு உள்நோயாளிகளை உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள், வார்டு பணியாளர்கள் ஆகியோர் பரிசோதனைகளை கொடுப்பதற்காகவும், முடிவுகளை பெற்று செல்வதற்காகவும் வருகின்றனர்.
ஆனால் உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக ஒருவர் மட்டும் பணியில் இருப்பதால் எப்போதும் வார்டு பணியாளர்கள் பிரிவின் உள்ளும், நோயாளிகளை பார்த்துக் கொள்பவர்கள் வெளியிலும் நீண்ட வரிசையில் நின்று பரி சோதனைகளை கொடுத்து, முடிவுகளை பெற்று செல்ல வேண்டியுள்ளது.
வார்டு பணியாளர்கள் பரிசோதனை பிரிவுக்கு சென்றால் மீண்டும் வார்டுக்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆவதாக சில செவிலியர்கள் வசைபாடுகின்றனர். இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தும் பணிச்சுமை யுடன் பணிபுரியும் ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
மேலும் நோயாளிகளை உடன் இருந்து பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லா மல் போவதால் கழி வறைக்கு செல்வதற்கு கூட உள்நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே உள்நோயாளிகளுக்கான பரிசோதனை பிரிவில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.