/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உடல் உறுப்புகள் தானத்தில் விருதுநகருக்கு 3வது இடம் உடல் உறுப்புகள் தானத்தில் விருதுநகருக்கு 3வது இடம்
உடல் உறுப்புகள் தானத்தில் விருதுநகருக்கு 3வது இடம்
உடல் உறுப்புகள் தானத்தில் விருதுநகருக்கு 3வது இடம்
உடல் உறுப்புகள் தானத்தில் விருதுநகருக்கு 3வது இடம்
ADDED : செப் 12, 2025 04:13 AM
விருதுநகர்:தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 2024-2025 ஆண்டில் அதிக உடல்உறுப்புகளை தானமாக பெற்று விருது நகர் அரசு மருத்துவக் கல்லுாரி 3வது இடத்தை பெற்றுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டு தற்போது 1276 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி வெளி நோயாளிகள் 2 ஆயிரம் பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு கடந்தாண்டு சாத்துாரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளியான ராமர் 47, சாலை விபத்தில் காயமடைந்து மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார். இவரின் கல்லீரல், இரண்டு கண்கள், சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு ஆறு நோயாளிகள் பய னடைந்தனர்.
மேலும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து 58. இவர் டூவீலர் விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இவரின் உடல்உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கரேஸ்வரன் 46. இவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இவரின் உடல் உறுப்புகளும் தானமாக பெறப்பட்டு 4 பேர் பயனடைந்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அதிக உடல் உறுப்புகளை தானமாக பெற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை மாநில அளவில் 3வது இடத்தை பெற்றுள்ளது.