/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டுநிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு
நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு
நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு
நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு
ADDED : ஜன 05, 2024 10:53 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராபட்சம் காட்டி ஓரவஞ்சகமாக செயல்படுகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பி.ராமச்சந்திராபுரத்தில் தமிழ்நாடு முன்னாள் காங்., கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டதில், வெறும் 450 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது. மொத்தத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி தர வேண்டும். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒரு கண்ணில் வெண்ணெயும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் மோடி அரசு ஓரவஞ்சகமாக செயல்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவை துண்டு, துண்டாக்கும் முயற்சியாகும். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது என்றார். விருதுநகர் லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடுமா என்ற கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.