/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மேல துலுக்கன்குளத்தில் பராமரிப்பில்லா நுாலகம் மேல துலுக்கன்குளத்தில் பராமரிப்பில்லா நுாலகம்
மேல துலுக்கன்குளத்தில் பராமரிப்பில்லா நுாலகம்
மேல துலுக்கன்குளத்தில் பராமரிப்பில்லா நுாலகம்
மேல துலுக்கன்குளத்தில் பராமரிப்பில்லா நுாலகம்
ADDED : மே 29, 2025 11:18 PM

காரியாபட்டி: மேல துலுக்கன்குளத்தில்உள்ள நுாலகம் பராமரிப்பின்றி கிடப்பதால் வாசகர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி மேல துலுக்கன்குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் கட்டப்பட்டது. பல்வேறு இளைஞர்கள் நுாலகத்தில் படித்து குரூப் தேர்வு எழுதி அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். வாசகர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். அருகே உள்ள பள்ளி மாணவர்களும் புத்தகம், செய்தி வாசிப்பு என நுாலகத்திற்கு சென்று வருகின்றனர்.
நாளடைவில் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. கண்டும் காணாமல் இருப்பதால் கட்டடம் சேதம் அடைந்து வருகிறது. கட்டடத்தைச் சுற்றிலும் அசுத்தமாக கிடக்கிறது. செடிகள் முளைத்து கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. கட்டடம் சேதமடைந்து உள்ளது.
புத்தகங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. பராமரிப்பு கேள்விக்குறியாக இருந்து வருவதால், வாசகர்கள் சென்று வர பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களது நலனை கருத்தில் கொண்டு, புதர் மண்டி கிடப்பதை அப்புறப்படுத்த வேண்டும்.
சேதமடைந்து கிடக்கும் கட்டடத்தை சீரமைக்க வேண்டும். புத்தகங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.