/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டுஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டு
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டு
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டு
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டு
ADDED : ஜன 28, 2024 06:41 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் டூவீலர் திருட்டால் ஊழியர்களும், பொது மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களின் டூவீலர்களும், பணியாற்றும் ஊழியர்களின் டூவீலர்களும், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இவ்வாறு நிறுத்தப்படும் டூவீலர்கள் சமீப காலமாக திருடப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒரு டூவீலர் திருடப்பட்ட நிலையில், தற்போது மாதாங்கோவில் தெருவை சேர்ந்த ஜெயராணி, 34, என்பவர் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து பார்க்கும்போது டூவீலர் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் திருடப்பட்ட டூவீலரை தேடி வருகின்றனர்.