ADDED : மார் 23, 2025 07:14 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நடைமேடையில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பதை தடுக்க வைக்கப்பட்ட தடுப்புகள் மாற்றுத்திறனாளிகள் அறைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதை முறைப்படுத்த வேண்டும்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டு வாகன காப்பகத்தில் டூவீலரை நிறுத்தாமல் நடை மேடையிலேயே நிறுத்தி சென்றனர்.போக்குவரத்து, நீதிமன்றம், மின்வாரியம், போலீஸ், வழக்கறிஞர் என பல்வேறு தரப்பினரும் பகலில் வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தினர். இதனால் பயணிகளுக்கு இடையூறு அதிகமாகி இடத்தை சுற்றி கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனனர்.
இந்நிலையில் இதனை ஒட்டி செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு அறைக்கு சென்று வர இதனால் தடை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் நின்று காத்திராமல் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஓய்வு அறை உபயோகித்து வரும் நிலையில் கயிறு கட்டுவதால் கடந்து செல்ல வழி இல்லை. எனவே மாற்று திறனாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் தடையை அகற்ற வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.