ADDED : மார் 23, 2025 07:13 AM
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் போதை ஒழிப்பு அமைப்பு, சுயநிதி வணிகவியல் துறை, நுண்ணுயிர் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் வருவாய் ஆய்வாளர் பவுன்ராஜ் பங்கேற்றார். மேலும் கல்லுாரி முதல்வர் சாரதி, தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறைத் தலைவர்கள் செல்வநாதன், பால்பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.