ADDED : செப் 15, 2025 06:59 AM
ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே எஸ்.
ராமலிங்கபுரத்தை சேர்ந்த சின்ன குருசாமி மகன் சிவா 25, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் டூவீலரில் நேற்று மதியம் 1:30 மணிக்கு ராஜபாளையம் சென்றுவிட்டு எஸ். ராமலிங்கபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம் விலக்கிற்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் பின்னால் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.