ADDED : செப் 15, 2025 06:58 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க அமைப்பின் கூட்டம் நடந்தது.
கிளை தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராம் பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் கழிவுநீர் கலந்து வெளியேறுவதால் மற்ற கண்மாய்களும் பாதிப்பு அடைகிறது. இதை தடுக்க வேண்டும்.
பெரிய கண்மாயிலிருந்து திருவிருந்தாள்புரம் கண்மாய் வரையுள்ள கால்வாய் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். சர்வே செய்து எல்லை கல் நட நீர்வளத்துறை, வருவாய் துறை இணைந்து செயல்பட வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.-