ADDED : பிப் 25, 2024 02:48 AM

விருதுநகர்:மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் பஸ் நடத்துனர் ரமேஷ் ராஜா 41, அதே பஸ்சின் டிரைவராக பணிபுரிந்தவர் சிவஞானபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி. இருவரும் பணி முடித்த பின் நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் 29, என்பவருடன் சின்னகட்டளையில் உள்ள பஸ்சை எடுப்பதற்காக பிப். 23 இரவு 10:30 மணிக்கு ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றனர்.
விருதுநகர் -- டி.கல்லுப்பட்டி ரோட்டில் சிவஞானபுரம் விலக்கு அருகே சென்றபோது பேரையூர் வி.கோபாலபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார் 28, ஓட்டி வந்த அரசு பஸ் டூவீலர் பின்னால் மோதியதில் கருப்பசாமி, கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காயமடைந்த ரமேஷ் ராஜா விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.