Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அலைபேசி நெட்வொர்க் கிடைக்காமல் அவதி

அலைபேசி நெட்வொர்க் கிடைக்காமல் அவதி

அலைபேசி நெட்வொர்க் கிடைக்காமல் அவதி

அலைபேசி நெட்வொர்க் கிடைக்காமல் அவதி

ADDED : ஜூன் 27, 2025 12:40 AM


Google News
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான பிளவக்கல் அணை, கிழவன் கோயில், பட்டு பூச்சி உட்பட பல்வேறு இடங்களில் அலைபேசிகள் நெட்வொர்க் கிடைக்காததால் ஆபத்து காலத்தில் தகவல் தொடர்பு கொள்ள முடியாமலும், மாணவர்கள் படிப்பதற்கு இணைய சேவை கிடைக்காமலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அலைபேசி நெட்வொர்க் இணைப்பும் கிடைக்காததால் விபத்து சமயங்களிலும், விஷ பூச்சிகள் பாதிப்புகளிலும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அன்றாட படிப்பிற்கு அலைபேசியை பயன்படுத்த முடியாமலும் தவிக்கின்றனர்.

போலீசார், வனத்துறையினர் உட்பட பல்வேறு அரசு துறையினர் வனப்பகுதிக்கு சென்றால் வெளி உலக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது.

இங்கு அலைபேசி தவிர அனைத்து மக்கள் எளிதில் தகவல் தொடர்பு வசதி பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us