ADDED : ஜூன் 27, 2025 12:40 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டர் சுகபுத்ரா சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று காலை 11:30 மணிக்கு கோயிலுக்கு வந்த கலெக்டரை ஸ்ரீவில்லிபுத்துார் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின் கோயிலில் கொடிமரம், லக்ஷ்மி நரசிம்மர்சன்னதி, ஆண்டாள் சன்னதி, தங்க விமானம்,கண்ணாடிக்கிணறு, கண்ணாடி மண்டபம் ஆகியவற்றை தரிசித்தார்.
அவருக்கு கோயில் அர்ச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பூ மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்கினர். பின் வடபத்ர சயனர் சன்னதிக்கு செல்லாமல் விருதுநகர் புறப்பட்டு சென்றார்.