ADDED : பிப் 11, 2024 01:26 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளிகள், கல்லுாரி களுக்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு படிக்க வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பஸ்களில் தான் பயணம் செய்கின்றனர்.
பள்ளி நேரத்தில் வருவதற்காக கிடைக்கின்ற பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு தான் வருகின்றனர்.
டிராபிக் போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் தொடர்ந்து சோதனை செய்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை பிடித்து, எச்சரிக்கை செய்தாலும் மாணவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கல்லூரி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்கள் தான் இது குறித்து தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.