/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலெக்டரின் பெயர் வைத்து நன்றி தெரிவித்த திருநங்கைகள் கலெக்டரின் பெயர் வைத்து நன்றி தெரிவித்த திருநங்கைகள்
கலெக்டரின் பெயர் வைத்து நன்றி தெரிவித்த திருநங்கைகள்
கலெக்டரின் பெயர் வைத்து நன்றி தெரிவித்த திருநங்கைகள்
கலெக்டரின் பெயர் வைத்து நன்றி தெரிவித்த திருநங்கைகள்
ADDED : ஜூன் 14, 2025 12:11 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவில்புலிகுத்தியில் திருநங்கைகள் குடியிருப்பை கட்டி தந்ததற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதிக்கு 'அன்பு ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நகர்' என திருநங்கைகள், பெயர் பலகை வைத்து நன்றி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் இ.குமாரலிங்கபுரம் ஊராட்சி கோவில்புலிகுத்தியில் திருநங்கைகளுக்கு 24 வீடுகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டது.
இந்தாண்டு பிப்.ல் குடியேறினர். இதற்காக சி.எஸ்.ஆர்., நிதியாக தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.24 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள், மின்சாரம் வாறுகால், சிறுபாலம் அமைக்கும் பணிகள், பேவர் கற்கள் கொண்டு ரோடு ரூ.21 லட்சத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் வீடுகள் வழங்கப்பட்டது.
இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிக்கு 'அன்பு ஆட்சியர் வீ.ப., ஜெயசீலன் நகர்' என மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் சார்பில் பெயர் பலகை 2 மாதங்கள் முன் வைக்கப்பட்டது. இது தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது.