/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிக்கல்: 'மில்லிங்' செய்யாமல் போடப்படும் ரோடுகள்: தாழ்ந்து போகும் குடியிருப்புகளால் அவதி சிக்கல்: 'மில்லிங்' செய்யாமல் போடப்படும் ரோடுகள்: தாழ்ந்து போகும் குடியிருப்புகளால் அவதி
சிக்கல்: 'மில்லிங்' செய்யாமல் போடப்படும் ரோடுகள்: தாழ்ந்து போகும் குடியிருப்புகளால் அவதி
சிக்கல்: 'மில்லிங்' செய்யாமல் போடப்படும் ரோடுகள்: தாழ்ந்து போகும் குடியிருப்புகளால் அவதி
சிக்கல்: 'மில்லிங்' செய்யாமல் போடப்படும் ரோடுகள்: தாழ்ந்து போகும் குடியிருப்புகளால் அவதி
ADDED : ஜூன் 14, 2025 12:10 AM

ராஜபாளையம்: மாவட்டத்தில் போடப்படும் புதிய ரோடு பணிகள் 'மில்லிங்' எனப்படும் தோண்டி பெயர்த்துவிட்டு போடாமல் பணிகள் நடப்பதால் உயர்ந்து குடியிருப்புகள் தாழ்வதுடன் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
பழைய ரோட்டை'மில்லிங்' செய்யாமல் புதிய ரோடு போடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் தற்போதும் முழுமையான அளவு கடைபிடிக்கப்படுவது இல்லை.
மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை, தாமிரபரணி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று புதிய ரோடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இவற்றில் பல இடங்களில் முடிவுற்ற பகுதிகளில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு மிகுந்த சேதமாகி புதிய ரோடு போடப்பட்டு வருகிறது. இது தவிர தற்போது பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட ரோடுகள் சிறப்பு ரோடுகள் திட்டத்தின் மூலம் அமைக்கும் பணிகள் ஆங்காங்கு நடக்கிறது.
இந்நிலையில் புதிய ரோடு பணியின் போது ஏற்கனவே உள்ள ரோடு மில்லிங் செய்து அகற்றப்பட்டு புதிய ரோடு அமைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல்வர் உத்தரவுப்படி புதிய ரோடு களின் கணம் தரமாக உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலங்களில் ரோடுகளில் உள்ள மழை நீர் கால்வாய்களுக்கு செல்ல வழி செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இந்நிலையில் ராஜபாளையத்தில் ஏற்கனவே பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் புதிதாக அமைக்கும் போது பெரும்பாலும் இந்நடைமுறை பின்பற்றவில்லை.
தற்போதும் விடுபட்டுள்ள ரோடு பணிகளிலும் இவை பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.
ராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப் பாதையாக இருந்து வரும் டி.பி., மில்ஸ் ரோடான பஞ்சு மார்க்கெட்டில் இருந்து ரயில்வே பாலம் வரையிலான புதிய ரோடு அமைக்கும் பணிக்கு முழுவதும் தோண்டாமல் தார் ரோட்டில் லேசான கீறல் மட்டும் போட்டு பணிகளை துவங்கியுள்ளனர்.
பல்வேறு கனரக வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் தோண்டாமல் மேலும் மேலும் உயர்த்தி போடுவதால் ஏற்கனவே உள்ள கடைகள், குடியிருப்புகள் தாழ்வாக மாறி மழைக்காலத்தில் கழிவு நீர் உட்புகுகிறது. அத்துடன் மின்கம்பங்களில் வயர்கள் உரசி பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எனவே அரசு ஏற்கனவே அறிவித்தபடி புதிய ரோடு பணிகளை தோண்டி முழுமையாக அகற்றி பழைய உயரத்திலேயே இருக்கும்படி அமைக்க ஒப்பந்ததாரர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.