/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கண்ட இடங்களில் நிற்கும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்கண்ட இடங்களில் நிற்கும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
கண்ட இடங்களில் நிற்கும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
கண்ட இடங்களில் நிற்கும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
கண்ட இடங்களில் நிற்கும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 08, 2024 05:27 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் உள்ள மினி பஸ்கள் தங்கள் இஷ்டத்திற்கு கண்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டையில் இருந்து கோவிலாங்குளம், கட்டங்குடி, காந்தி நகர், அரசு மருத்துவமனை, புறநகர் பகுதிகளுக்கு மினி பஸ்கள் வந்து செல்கின்றன. நகருக்குள் வந்து செல்ல பல டிரிப்புகள் அடிப்பதால் மக்கள் வந்து செல்ல வசதியாக உள்ளது.
இருப்பினும் நகருக்குள் வந்து, செல்லும் மினி பஸ்கள் குறிப்பிட்ட ஸ்டாப்களில் நிற்காமல் கண்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால், பஜார் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமுத லிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பில் பள்ளிகள், கல்லூரி இருப்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்வர்.
இந்தப் பகுதியில் 2 மினி பஸ்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். பள்ளி நேரங்களில் ஸ்கூல் ரோட்டில் மினி பஸ்களை நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் எச்சரிக்க வேண்டும். மேலும் நகருக்குள் குறிப்பிட்ட இடங்களில் நின்று தான் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.