ADDED : ஜன 29, 2024 05:02 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தி.மு.க., தெற்கு மண்டல நெசவாளர் அணி சார்பில் கைத்தறி நெசவாளர்களின் நேரடி விற்பனை, வர்த்தக கண்காட்சி நடந்தது.
நெசவாளர் அணி துணை தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலர் பழனிச்சாமி வரவேற்றார். மாநில செயலாளர் பெருமாள், துணை செயலர் ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், நகராட்சி தலைவி சுந்தரலட்சுமி பேசினர். 20 க்கும் மேற்பட்ட நெசவாளர் சங்கங்களின் கண்காட்சி நடந்தது. இதில் விதவிதமான சேலைகள் , வேஷ்டிகள், சேலைகள், சுடிதார் ரகங்கள் உட்பட கைத்தறி ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், தி.மு.க., நகரச் செயலாளர் மணி, தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அண்ணாதுரை, வடக்கு அமைப்பாளர் கடம்பவனம், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.