ADDED : ஜன 01, 2024 05:06 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை, திருவம்பாவை ஒப்புவித்தல், வேட போட்டிகள் போட்டிகள் நடந்தன. சங்க நிர்வாகி ஸ்ரீவாரி முத்துப்பட்டர் தலைமை வகித்தார். செயலாளர் சேஷாத்ரி முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் பங்கேற்று திருப்பாவை, திருவம்பாவை பாடல்கள் பாடினர். குழந்தைகள் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் போன்ற வேடமணிந்து பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரிய நம்பி சுவாமிகள் பரிசுகள் வழங்கினார். கர்நாடக இசை பாடகி உமா, சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பொருளாளர் மலை சீனிவாசன் செய்திருந்தார்.