/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதியில்லை ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதியில்லை
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதியில்லை
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதியில்லை
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதியில்லை
ADDED : ஜூன் 28, 2025 11:26 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான சிறுநீர் கழிப்பறை வசதி ஏற்படுத்தாததால் திறந்தவெளி உபயோகத்தை தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் முன்பு காத்திருக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு மே 29-ல் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தினமும் 50 டவுன் பஸ்களுடன் 300-க்கும் அதிகமான ட்ரிப்புகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படவில்லை. இதனால் அவசரத்திற்கு ஒதுங்க வழியின்றி ஆண்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுகிறது.
இதுகுறித்து சங்கர்: ஏற்கனவே கட்டண கழிப்பறை குறைவாக அமைத்தும் குறிப்பிட்ட சில நேரம் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்க வேண்டிய இலவச சிறுநீர் கழிப்பிடம் இங்கு ஏற்படுத்தவில்லை.
இதனால் ஆண் பயணிகள் திறந்த வெளியிலேயே உபயோகித்து செல்லும் நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்காததால் பஸ் ஸ்டாண்ட் முன்பு துர்நாற்றத்தால் நிற்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும்.