/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர் சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
ரோடு வேண்டும்
லட்சுமி, குடும்ப தலைவி: எங்கள் காலனிக்கு வரும் பாதை மற்றும் தெருக்களில் பல ஆண்டுகளாக ரோடு அமைக்கவில்லை. கிடங்கான ரோடாக இருப்பதால் எங்களால் நடந்து செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை கோரிக்கை வைக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதிக்கு ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாறுகால் இல்லை
முத்துமாரி, குடும்ப தலைவி: எங்கள் வடக்கு காலனியில் உள்ள தெருக்களில் வாறுகால் அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவில் நடையில் ஓடுவதால் பக்கத்து வீடுகளில் அடிக்கடி சண்டை நடக்கிறது. கழிவுநீர் தேங்கிருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கும் முறையாக அனைத்து தெருக்களுக்கும் வாறுகால் அமைத்து தர வேண்டும்.
கழிப்பறை இல்லை
முத்துலட்சுமி, குடும்பத்தலைவி: வடக்கு காலனியில் பொது கழிப்பறை இல்லை. இதனால் திறந்த வெளி மற்றும் ரோடு ஓரங்களை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இருபாலாருக்கும் நவீன சுகாதார வளாகம் எங்கள் பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை இன்றி பெண்கள் சிரமப்படுகின்றனர்.